புரவி சூறாவளி மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக தகவல்

தொலைவிற்கு நகர்ந்துள்ளது... புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளியை அடுத்து ஆறு மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல்மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.