ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இடைமறித்து திட்டிய நபர்

கனடா: பிரதமரை சாடிய நபர்... டொரண்டோவில் ஆதரவாளர்களுடன் கை குலுக்கி கொண்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இடைமறித்த நபர், நீங்கள் நாட்டையே நாசமாக்கிவிட்டீர்கள் என சாடினார்.

வெளிநாட்டினரை அதிகளவில் இடம்பெயர அனுமதிப்பதால் கனடா நாட்டினருக்கே வீடு கிடைப்பதில்லை என ட்ரூடோவிடம் கடிந்துவொண்டார்.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த மக்கள் மீது தனி வரி விதிக்கப்பட்டுவரும் நிலையில், அதிக கார்பனை வெளியிடும் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்ட 9 கார்கள் பிரதமரின் கான்வாயில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மக்களின் வரி பணத்திலிருந்து உக்ரைனுக்கு 10 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியது ஏன் என வாக்குவாதம் செய்தார். ரஷ்ய அதிபர் புடின் பேசுவதை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கேள்வி கேட்கிறாயா என கேட்ட ட்ரூடோவிடம், நீங்கள் தான் அனைத்தையும் சென்சார் செய்துவிட்டீர்களே என சாடினார்.