வரும் 31ம் தேதி முதல் நோவா ஸ்கோஷியாவில் முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் கட்டாயம்... நோவா ஸ்கோஷியாவில் (NOVA SCOTIA) உள்ள பெரும்பாலான உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.

எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி முதல் இந்த விதி அமுலுக்கு வருமென மாகாண முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் கூறுகையில், ‘பெரும்பாலான உட்புற பொது இடங்களில் மருத்துவ அல்லாத முகக்கவசம் அணிவதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

கோவிட்-19 உடன் வாழ கற்றுக்கொள்வதால், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், நமது உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கவும் இதுவே உதவும்’ என கூறினார்.

கனடாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 911 என்பது குறிப்பிடத்தக்கது.