தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு... மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கியுள்ளார்

தமிழகம்: தமிழகத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கு மேலும் மக்கள் அனைவரும் அலட்சியமாக இருந்தால் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றும்படி மக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவில் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கட்டாயமாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த வேளையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தற்போது கொரோனா கேர் மையங்கள் திறக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலும் தமிழகத்தில் கொரோனா அதிகமானால் கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கேர் சென்டர்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.