உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அலிகாரில் உள்ள பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தில் மின்னல் மற்றும் கனமழையால், சுவர், வீடு இடிந்து விழுந்த சம்பவங்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நேற்று காலை முதல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து வியாழன் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் மழை பதிவாகியுள்ளது. அலிகரில், கடந்த 3 நாட்களாகவே பெய்த கனமழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தண்ணீர் தேங்கி, மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சனிக்கிழமை வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் இந்தர் வீர் சிங் உத்தரவு அவர்கள் பிறப்பித்துள்ளார்.