தற்கொலை செய்து கொள்ள தடை விதித்தாராம் வடகொரிய அதிபர்

சியோல்: தடை விதித்தார்... வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டில் தற்கொலை செய்து கொள்ள தடை விதித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வது தேசத் துரோகக் குற்றமாகும் என கிம் ரகசிய உத்தரவு பிறப்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிம் அரசு அதிகாரிகளுக்கு தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க உத்தரவிட்டுள்ளார். நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய ரகசிய ஆவணங்களின்படி, வட கொரியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளது

கடந்த ஆண்டில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை விவரிக்கிறது. சாங்ஜின் சிட்டி மற்றும் கியோங்சாங் கவுண்டியில் மட்டும் இந்த ஆண்டு 35 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. வடகொரியாவின் பொருளாதார நெருக்கடி கடந்த ஓராண்டாக மோசமடைந்துள்ளது.

தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர், மக்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் தீர்க்க முடியாத பல உள் பிரச்சினைகள் இருப்பதாக விளக்குகிறார்.

இதனால் தான் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவித்துள்ளது.