காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,362 ஆக உயர்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5,362 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 88 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள அண்ணா தெருவை சேர்ந்த 75 வயது முதியவர், படப்பை வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், செரப்பனஞ்சேரி ஊராட்சி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், 48 வயது ஆண், மணிமங்கலம் குருக்கள் தெருவைச் சேர்ந்த 37 வயது ஆண், ஒரகடம் அடுத்த வைப்பூர் பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், ஒரகடம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், 38 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,362 ஆனது. இவர்களில் 2,934 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,357 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 71 பேர் பலியாகி உள்ளனர்.