கனடாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்தை நெருங்குகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் எட்டு ஆயிரத்து 917பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 476பேர் பாதிப்படைந்ததோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 470ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஆறாயிரத்து 88பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, இரண்டு ஆயிரத்து 237பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர ஒரு இலட்சத்து 465பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.