ரஷ்யாவில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆனது... ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 20ஆயிரத்து 56பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை 11 இலட்சத்து 36ஆயிரத்து 48பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 212பேர் பாதிப்படைந்ததோடு, 108பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 846பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது இலட்சத்து 34ஆயிரத்து 146பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.