தமிழகத்தில் மீண்டும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 68,000ஐ தாண்டியது

தமிழகம்: கொரோனா வைரஸ் சீனாவில் ஒரு பகுதியான யூகான் பகுதியில் முதலில் பரவத் தொடங்கி உலக நாடுகளில் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், பஸ் போக்குவரத்துகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்பட்டு, அதன் அடிப்படையிலே தளர்வுகள் அளிக்கப்பட்டன.

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பதற்கான தடுப்பூசியை சீனா அரசு கண்டுபிடித்தது. பின்னர், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி 2 தவணையாக போடப்பட்டன.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 1,96,00,42,768 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, நேற்று ஒரே நாளில் 14,99,824 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மீண்டும் கொரோனா வைரஸ் உச்ச நிலையை அடைந்துள்ளதாகவும், தினசரி பாதிப்பு அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதாகவும், கொரோனா பாதிப்பு 4 கோடியை தாண்டியதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக 13,216 பேர் பாதித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒரே நாளில் புதிதாக 23 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.