கொரோனாவால் உலக அளவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்கியது

சர்வதேச அளவில் கெரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆளானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் மெதுவாகக் குறைந்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் 31 ஆயிரத்து 500 பேருடன் முதலிடத்திலும், 25 ஆயிரம் பேருடன் அமெரிக்கா 2ம் இடத்திலும், 13 ஆயிரம் பேருடன் இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன.

நோய்த் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கையில் ஆயிரத்து 200 பேருடன் பிரேசில் முதலிடத்திலும் 800 பேருடன் அமெரிக்கா 2ம் இடத்திலும் 730 பேருடன் மெக்ஸிகோ 3ம் இடத்திலும் உள்ளன.

இதேபோல் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பெரு, ஈரான், சிலி, பாகிஸ்தான் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் மூன்றிலக்க உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.