மூன்று மாதங்களில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை குறைந்தது

வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை குறைந்தது... சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, கடந்த மூன்று மாதங்களில் வேல்ஸில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

வேல்ஸ் முழுவதும் இப்போது 41,000 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் பிரித்தானியா அளவிலான 3.9 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2.7 சதவீத வேலையின்மை வீதமாகும். இருப்பினும், கொவிட்-19 காரணமாக வேல்ஸில் வேலை தக்கவைப்பு திட்டத்தின் கீழுள்ள மக்களின் அளவை புள்ளிவிபரங்கள் பிரதிபலிக்கவில்லை.

புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள், வேல்ஸில் 378,000 பேர் பிரித்தானிய அரசாங்கத்தின் வேலை தக்கவைப்பு திட்டத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. வேல்ஸில் 32 சதவீதமான தொழிலாளர்கள் சலுகையை பெற்றுள்ளதாக தேசிய புள்ளி விபரங்களுக்கான அலுவலகம் கூறுகிறது.