தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் கடந்த மாதத்தை விட இந்த மாதம் அதிகம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களில் மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா பரவல் அதிவேகமாக பரவி கொண்டு வருகிறது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால் சளி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில் தற்போது கொரோனா தொற்று உறுதியாகும் சதவீதம் உயர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மாதம் 0.4 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியை சென்னை மாநகராட்சி மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ளது.