தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அதிமுகவை அசைக்க முடியாது

அதிமுகவை அசைக்க முடியாது... தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒன்றல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நடந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அதிமுகவை வலுவான இயக்கமாகவும் கோட்டையாக மாற்றியுள்ளனர். எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் என ஜெயலலிதா தீர்க்கமாக கூறினார்.