அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு .. இன்று தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த 2011 முதல் 2015 -ஆம் ஆண்டு வரை நடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகயிருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்து விட்டதால் சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவித்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் 2 தரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.