மகளிர் உரிமை தொகை..இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்

சென்னை:மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, ரூ.1,000 தொகை, இந்த மாதம் 14 ஆம் தேதியே வங்கிக்கணக்கில் வரவு ... மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இந்த திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் பலனடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் 21 -ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, ரூ.1,000 தொகை, இந்த மாதம் 14 ஆம் தேதியே, அதாவது ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே பயனாளர்களுக்கு வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.