மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் 215 உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நிறைவேறியது. எம்பிக்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மோடி வாழ்க என்று முழக்கமிட்டனர்.