சீனாவில் கொரோனா பரவல் உயர்வு ... உலக சுகாதார அமைப்பு கவலை

பெய்ஜிங்: பரவல் உயர்வை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை .... சீனாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி கொண்டு வருகின்றன. இந்நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பற்றி உலக சுகாதார அமைப்பு கவலையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பில் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அவர்கள் கூறுகையில்,

சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இருப்பினும், தொற்றுநோய் நிலைமை பற்றி விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும். சீனாவில் தற்போதை தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. கண்காணிக்கவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டு வருகிறோம்.

மேலும் மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து வழங்குகிறோம் என அவர் கூறினார்.