கோவையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை; அமைச்சர் தகவல்

கோவையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க தேவையில்லை. இதுகுறித்து மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்தால்தான் ஊரடங்கை கொண்டு வர முடியும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்தித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுபாட்டில் இருக்கிறது. கொரோனா அறிகுறியை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 5 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தபட்டு வருகிறது. முதல்வரின் அறிவுரை படி கோவையில் கொரொனாவால் பாதிக்கபடுவோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை தொடங்கபட்டுள்ளது.

இது வரை 80620 பேருக்கு சோதனை செய்யபட்டுள்ளது. கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த புதிய நபர்கள் வருகை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு கோவையில் ஊரடங்கு கொண்டுவர தேவையில்லை என்றார்.

மருத்துவக்குழுவினரின் பரிந்துரைபடி தான் ஊரடங்கை கொண்டு வர முடியும் என கூறிய அவர் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.