ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக இந்த தேதி சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக வருகிற ஆக.19,20 சிறப்பு முகாம் ...தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் மூன்று கட்டங்களாக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தற்போதைக்கு முதற்கட்ட பணி முடிவடைந்து 2- ம் கட்ட பணியின் நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும், இரண்டாம் கட்ட முகாமில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய தவறியவர்களுக்காக வரும் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகள் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டு உள்ள விபரங்களின் அடிப்படையில் தேவை ஏற்படும் பட்சத்தில் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் வருவார்கள் என்றும், அதற்கு குடும்பத் தலைவிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.