ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதும் கண்டிப்பாக இதை செய்யக்கூடாது

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் செய்யக்கூடாதவை... ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் ஒரு சில விஷயங்களில் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். பெரும்பாலானோரின் முதல் திட்டமிடுதலே பயணமாகத்தான் இருக்கும்.

ஒரே சமயத்தில் நிறைய பேர் ஒரே இடத்தில் கூடினால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் நேரும். சில நாட்களுக்கு பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்து கொள்வது அவசியமானது.

எல்லா காலகட்டத்திலும் வைரஸ் கிருமிகள் படர்ந்திருக்கும். அதனால் கைக்கழுவும் பழக்கத்தை அடிக்கடி மேற்கொள்வதை கைவிட்டுவிடக்கூடாது. வெளியே சென்றால் முகக்கவசம் அணியும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கடைகளுக்கோ, வெளி இடங்களுக்கோ செல்லும்போது சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்புவது கூடாது. இருமும்போதும், தும்மும்போதும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாயை மூடிக்கொள்வது சிறந்தது. நண்பர்கள், உறவினர்களை வீடு தேடி சென்று சந்திப்பதையும் சில காலம் தவிர்ப்பது நல்லது.