திருப்பூரில் ஆளுநரை எதிர்த்து கோஷம் எழுப்பியவர்கள் கைது

திருப்பூர்: திருப்பூரில் தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மற்றும் அவரது உருவப்படத்தை கிழித்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போலீசாருடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் அவருடைய உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன் தலைமையில் கொடி பிடித்து வந்த ஒரு பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மற்றும் அவரது உருவப்படத்தை கிழித்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போலீசாருடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து கைது செய்த 6 பேரையும் காவல்துறையினர், தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.