நாடு முழுவதும் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி : ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு ..... நாடாளுமன்றத்தில் 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்து கொண்டு வருகிறார். இதனை அடுத்து அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேடுகள், வாட்டர் ஏரோ டிரோன்கள், மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்.

மேலும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு 2030-க்குள் 5 எம்எம்டி என்ற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு. ஆற்றல் மாற்றத்தை அடைவதற்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு என அவர் கூறினார்.