நீட் தேர்வில் வெற்றி பெற்ற தோடர் இன மாணவி: பழங்குடி மக்கள் உற்சாக கொண்டாட்டம்

நீலகிரி: பழங்குடி மக்கள் உற்சாகம்... நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் தோடர் இனத்தை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றதை பழங்குடி மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

அருவங்காடு பகுதியை சேர்ந்த நார் சோர் குட்டன், நித்யா தம்பதியரின் மகள் நீத்து சென், நீட் தேர்வில் 54 சதவீத (388) மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

நீத்து சென்னின் இந்த வெற்றியை பழங்குடியின மக்கள் கொண்டாடியதோடு, அவருக்கு ஆசி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறியுள்ளதாக மாணவி நீத்து சென் கூறினார்.