ஒரு வாரத்திற்கு சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாளை நவ., 5ம் தேதி முதல், 11ம் தேதி வரை, ஒரு வார காலத்திற்கு, கவிநகர் பாரதிதாசன் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


அதன்படி டி.டி.கே. சாமியர்ஸ் சாலை சந்திப்பு முதல் கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரையிலும், சி.வி.ராமன் சாலை சந்திப்பு முதல் ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை சந்திப்பு வரையிலும் ஒருவழிப் பாதையாக சாலை அறிவிக்கப்பட்டுள்ளது.