தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்க பயிற்சி வகுப்புகள் ...தமிழக பள்ளி கல்வித்துறை

தமிழகம்: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்து, திருமூர்த்தி நகரிலுள்ள மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்விக்கு செல்லும் போதும், வேலை வாய்ப்புகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் பிற நாடுகளில் பணிபுரியும் போதும் ஆங்கில உரையாடல் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

ஆங்கில மொழியில் சரளமாக உரையாட பயிற்சி அளித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தும் போது மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க முடியும். இதனால், மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றல் அதிகரிப்பதோடு ஆங்கில பாடத்தை சுயமாக கற்றறிந்து, படித்த பாடத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறனை வளர்க்க முடியும்.

எனவே ஆங்கில மொழியில் சரளமாக உரையாட பயிற்சி அளித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தும் போது மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க முடியும் என கல்வி அதிகாரிகள் கூறினார்கள்.

இந்தா நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்பித்தல், நுனி நாக்கில் சரளமாக பேசுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.