வார இறுதி விடுமுறை ..தமிழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: தொடர் விடுமுறை நாட்கள் பண்டிகைகள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களின் போது மக்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் பேருந்து, ரயில்கள் போன்ற அனைத்திலும் அதிக கூட்டல் நெரிசல் இருக்கும். எனவே இதன் காரணமாக தமிழக போக்குவரத்து துறை இவ்வாறான விடுமுறை நாட்களில் கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கி கொண்டு வருகிறது.

அந்த வகையில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி 2-வது சனிக்கிழமை மற்றும் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, மேலும் சுப முகூர்த்த நாளை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கும் சென்னையிலிருந்து மக்கள் பயணிப்பார்கள்.

மேலும் பிற முக்கிய இடங்களிலிருந்தும் மக்கள் அதிகம் பயணிக்க உள்ளதால் வெள்ளிக்கிழமை 8-ம் தேதி முதல் வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி

மேலும் திருச்சி, சேலம் போன்ற பிற இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் 9,299 பேர் பயண டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர்.