அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்:

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள குரங்குமேடு என்னும் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதி இன்றி தவிக்கும் மக்கள்.
இங்கு குறும்பர் இனத்தை சேர்ந்த 6 குடும்பகளை சேர்ந்தவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் வனபகுதியை ஒட்டி இந்த பழங்குடினர் வாழ்ந்து வருகின்றனர்.

தேயிலை விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதி இல்லை இவர்கள் அன்றாட தேவைக்கு சுமார் 20 கிமீ சென்று தலை சுமையாக சுமந்து தண்ணீர் கொண்டு வரும் நிலையில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் இவர்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விடு வெளி வர பயம் ஏன் என்றால் வன விலங்கு பிரெச்சனை. ஆதலால் யாரும் வெளி வருவது இல்லை.

மேலும் வீட்டிற்கு செல்ல நடைபாதை இல்லாமல் கரடு முரடான பாதையில் நடந்து செலும் அவல நிலை உள்ளது. இங்கு இருக்கும் மக்கள் போன் சார்ஜ் செய்வதற்கு சோலார் பயன்படுத்தி வருகின்றனர்.
பல முறை அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் எந்த தீர்மானும் கிடைக்கவில்லை. ஆதலால் இவர்கள் கவலை அடைவது தான் மிச்சம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அங்கு உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துத்துள்ளனர்.