மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை; முதல்வர் அதிரடி

அனுமதியில்லை... தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தோவு, மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாக கல்வியாளா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் குற்றம்சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை ஆலோசனை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.