வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம்

தொடர்ந்து போராட்டம்... அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டர், வாஷிங்டனில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு மேலாக பறந்து சென்றபோது உற்சாக முழக்கம் எழுப்பினர்.

அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன், அமெரிக்க அதிபராக எலெக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் சபை மூலம், இன்னும் இரண்டே நாட்களில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றிக்கு எதிராக டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கால்பந்து போட்டி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக டிரம்ப் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், வாஷிங்டனில் போராட்ட கூட்டத்திற்கு மேலாக பறந்து சென்றபோது அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.