இங்கிலாந்தில் இருந்து வந்த 745 பயணிகள் மும்பையில் தனிமைப்படுத்தப்படடனர்

இங்கிலாந்தில் இருந்து வந்த 745 பயணிகள் மும்பை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது தற்போது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வரும் இந்த வைஸ் காரணமாக இந்தியாவில்இருந்து இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்து வரும் டிசம்பர், 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இங்கிலாந்தில் இருந்து வந்த 1,688 பயணிகள் மும்பை வந்து இறங்கியுள்ளனர். அவர்களில் 745 பேர் மும்பையில் உள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். 7-வது நாளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

அதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனையில், அல்லது ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். நோய் தொற்று இல்லாதவர்கள் வீடுகளில் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு தெரிவித்து உள்ளது.