ஒப்பந்த முறையில் டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

சென்னை: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு... போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் (ஒப்பந்தம்) மூலம் டிரைவர், கண்டக்டர்களை பணியமர்த்துவதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.22 ஆயிரத்திற்கும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.813க்கு ரூ.553க்கும் டிரைவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதற்கு சி.ஐ.டி.யு. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தினர் ஏப்ரல் 18ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் துறை இணை ஆணையர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. ஒன்றிய பொதுச்செயலாளர் ஆனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொது செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, கூட்டமைப்பு இணை செயலாளர் அன்பழகன் பேசுகின்றனர்.