உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க அமெரிக்க முடிவு

அமெரிக்கா: உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது.

மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யா போரை தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு அமெரிக்கா 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.