சில மணிநேரம் யூடியூப் செயல்படாததால் பயனர்கள் அவதி

சென்னை: யூடியூப் செயல்படவில்லை... உலகம் முழுவதும் உள்ள யூடியூப் பயனர்கள் கடந்த சில மணி நேரங்களாக கடும் நெருக்கடியில் உள்ளனர்.

யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் அனலிட்டிக்ஸ் போன்ற கூகுள் தயாரிப்புகள் கடந்த சில மணி நேரங்களாக செயல்படவில்லை, இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு படிப்படியாக செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் கூகுளின் முக்கிய சேவைகள் முடங்கியதையடுத்து பயனர்கள் ட்விட்டரில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கூகுள் மட்டுமின்றி பல நிறுவனங்களின் சேவைகளும் முடங்கியுள்ளதாகவும், இவை அனைத்தும் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது