கவர்னர் தளர்வுகள் அறிவிப்பு குறித்து எழுதிய கடிதத்திற்கு உத்தவ் தாக்கரே பதிலடி

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோது, மகாராஷ்டிரா அரசும் ஊரடங்கை கடைபிடித்தது. பின்னர், ஐந்து கட்டங்களாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும், மகாராஷ்ரா அரசு 2-வது அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என கோவில் தரிசனம் போன்றவற்றிற்கு மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

கோவில்களை திறக்க பல்வேறு வழிகளில் கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவில்கள் ஏதும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இறுதியாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தளர்வுகளை தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா? அல்லது திடீரென்று மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து உத்தவ் தாக்கரே பதிலளிக்கையில், லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது சரியானது அல்ல. அதேபோல் ஒரே நேரத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிப்பது நல்ல விசயம் அல்ல. நான் ஹிந்துத்வாவை பின்பற்றுகிறவன். என்னுடைய இந்துத்வா உங்களால் சர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.