கிறிஸ்துமஸ் அதிசயம்... இன்னும் சில நாட்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கப்பட இருப்பது கிறிஸ்துமஸ் அதிசயம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் 98வது தேசிய கிறிஸ்துமஸ் மர ஒளியேற்றும் விழா நடைபெற்றது. மெலோனியா டிரம்ப் அங்கிருந்த பொத்தானை அழுத்தி கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், மில்லியன் கணக்கான கொரோனா மருந்துகளை
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகளை வழங்க உள்ளோம் என்றார். இதன் மூலம்
தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வந்து மில்லியன் கணக்கான உயிர்கள்
காப்பாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இது உண்மையிலேயே கிறிஸ்துமஸ் அதிசயம் என்று கூறிய அவர், வரலாற்றில் மருத்துவ ரீதியான பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று என்றார்.