பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு; பல்வேறு பிரபலங்கள் டுவிட்டரில் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவு குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் கூறியபோது, 'எனக்கு இது ஒரு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என்றும் அவருடைய பாடலுக்கு தான் மிகப்பெரிய ரசிகை என்றும் ஒரு இசைமேதை மறைவிற்கு இரங்கல் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்


மேலும் எஸ்பிபி மறைவிற்கு நடிகர் விக்ரம் பிரபு, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், இசையமைப்பாளர் இமான், இயக்குனர் கார்த்திக் நரேன், நடிகர் ஆர்யா, நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் பிரசன்னா, நடிகர் அருண் விஜய், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் கௌதம் கார்த்திக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் ஹரீஷ் கல்யாண், பாடலாசிரியர் விவேக், ஆர்ஜே ரம்யா சுப்பிரமணியம், பாடகர் கிரிஷ், செஸ் விளையாட்டு வீரர் விசுவநாதன் ஆனந்த், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.