இந்தியாவில் மீண்டும் பப்ஜி வரப்போகிறது என தகவல்கள் உலா

இந்தியாவில் மீண்டும் பப்ஜி வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வளர்ந்து வரும் நவீன இந்தியாவில் இணையதளமும், செல்போனும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதனுடேயே இப்போது இளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுவிட்டன. இது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அந்த வகையில், இந்தியாவில் பப்ஜி (PUBG) ஆன்லைன் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை, செல்போன் விளையாட்டாளர்களின் வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இதனால் பப்ஜி கேம் மீண்டும் வரவேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து தான் வருகின்றனர்.

இதனிடையே பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு போராடி வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு பப்ஜி கார்ப்பரேஷன் (PUBG Corporation) திட்டம் தீட்டி வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இவ்விவகாரத்தில் தகுந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி டெக் க்ரஞ்ச்(TechCrunch ) அறிக்கையின்படி, PUBG Corporation சமீபத்திய வாரங்களில் சர்வதேச அளவில் கிளவுட் சேவை வழங்கும் வல்லுநர்களுடன் இணைந்து இந்திய பயனர்களின் தரவை நாட்டிற்குளேயே சேமித்து வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சேவையை மீண்டும் தொடங்க எதிர்பார்க்கிறது என்று PUBG Corporation நாட்டின் சில உயர்நிலை ஸ்ட்ரீமர்களை தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.