புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில நல்ல அம்சங்களை ஏற்கிறோம்

விழுப்புரம்: சில நல்ல அம்சங்களை ஏற்கிறோம்... புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்ற சில நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் கல்விக் கொள்கையை அமல்படுத்த முதலமைச்சர் அமைத்துள்ள குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

குழுவின் அறிக்கை வர உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை பற்றி பேச துணை வேந்தர்களை ஆளுநர் ஏன் அழைக்க வேண்டுமென கேள்வியெழுப்பிய அமைச்சர் பொன்முடி, இது அரசின் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறினார்.

மேலும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்ற சில நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.