நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம்... வடகொரியா அதிபர் எச்சரிக்கை

வடகொரியா: எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அமெரிக்கா, தென்கொரியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை துரிதமாக ஈடுபடுத்த ஆயத்தமாக உள்ளோம் என்று வடகொரியா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய போா் முடிவுக்கு வந்ததன் 69-ஆவது ஆண்டு தினத்தையொட்டி முன்னாள் ராணுவத்தினரிடையே அதிபர் இது குறித்து அவா் பேசியதாவது:

எத்தகைய சவாலையும் எதிா்கொள்வதற்காக நமது ராணுவம் முழு தயாா் நிலையில் உள்ளது. அமெரிக்கா, தென் கொரியாவுடன் போா் ஏற்பட்டால், அந்தப் போரில் அணு ஆயுதங்களை மிகத் துரிதமாக ஈடுபடுத்தும் நமது படை ஆயத்தமாக உள்ளது.

வட கொரியாவை தீய சக்தியாக உலக அரங்கில் காட்டுவதன் மூலம், நமது நாட்டுக்கு எதிரான தங்களது கொள்கையை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது. நமது ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அமெரிக்கா, தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்வது இரட்டை வேடம் என்றாா் அவா்.