10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

சென்னை: பொதுவாக தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் 12-ம் வகுப்பிற்கும் அதனை தொடர்ந்து 10-ம் வகுப்புகளுக்கும் பொது தேர்வுகள் தொடங்கி நடத்தப்படும். ஆனால் கால தாமதமாக கல்வியாண்டு தொடங்கும் பட்சத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து தற்போது 2023 – 24 ஆம் கல்வியாண்டு வழக்கம் போன்று ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கிவிட்டது. கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே பொதுத்தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணைகள் வெளியிடப்பட்டு விடும்.

எனவே அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 13ம் தேதியும், 10ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 6ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்படலாம் என் உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு முன்னதாக பொது தேர்வுகள் நடைபெறுமா? அல்லது தேர்தலுக்குப் பின் பொது தேர்வுகள் நடைபெறுமா? என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி கொண்டு வருகிறது.

இதனால் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு அட்டவணைகளை எப்போது வெளியிடும் என்று மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. அரசு தரப்பு வட்டாரங்களின் படி வரும் நவம்பர் மாதம் பொதுத்தேர்வு அட்டவணைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.