சென்னையில் குப்பைகளை பணமாக மாற்றும் மையங்கள் இருக்கும் நிலையில், அதனை அதிகப்படுத்த மாநகராட்சி திட்டமிடல்

சென்னை: சென்னையில் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், அதனால் குப்பைகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே அதனை முறையாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக சென்னை கமிஷ்னர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து அவர் கூறுகையில் 2001ல் சென்னையில் 1 நாளைக்கு 2500 டன் குப்பைகளை கையாள வேண்டிய நிலைமை இருந்தது.

ஆனால் தற்போது 6150 டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால் மாநகராட்சியால் தினசரி 1,800 டன் கழிவுகளை மட்டுமே கையாள முடிகிறது. அதனால் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவது மட்டுமல்லாமல் அதனை உரிய முறையில் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இடங்களில் குப்பைகளிலிருந்து உரத்தைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதாவது நம்ம ஊரு அறக்கட்டளை என்ற பெயரில் புதுப்பேட்டை, கண்ணம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாநகராட்சியிடமிருந்து 30 டன் குப்பைகளைப் பெற்று அதில் இருந்து 10 டன் உரத்தை உற்பத்தி செய்து கொண்டு வருகின்றனர். இந்த உரம் கிலோ ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது.