மகளிர் உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீராங்கனைகள் வெற்றி கொண்டாட்டம்

ஸ்பெயின்: வெற்றி கொண்டாட்டம்... மகளிர் உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீராங்கனைகள் விமான பயணத்திலும் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல்கணக்கில் வென்ற ஸ்பெயின் வீராங்கனைகளுக்கு பாராட்டும் வாழ்த்தும் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆஸ்திரேலியா அரையிறுதியில் வெளியேறியபோது உள்ளூர் ஆர்வம் குறைந்தாலும், இறுதி போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்தில் திரண்டனர்.

இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்த ஸ்பெயின் இளம் வீராங்கனை கார்மோனாவுக்கும் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றடைந்த ஸ்பெயின் வீராங்கனைகள் ரசிகர்களுடன் இணைந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.