உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200 நாடுகளுக்கும் மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.89 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.24 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா , பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா ,பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியைக் கடந்துள்ளது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்கள் செயல்பட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உலகளவில் ரஷ்யாவில் தான் முதன் முறையாக கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.