நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவு


சென்னை: தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ....... கோடை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து ஏற்கனவே வானிலை ஆய்வு மையமானது, தமிழகத்தில் வெயிலின் அளவு 4 பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கும் என்று அறிவுறுத்தியிருந்த்தது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் 108 பாரன்ஹீட் வரை பதிவாகியிருந்தது. நேற்று பதிவான வெப்ப அளவானது, தமிழகத்தில் 17 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை அளவை தாண்டி உள்ளது . அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105.44 பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

இதையடுத்து திருத்தணியிலும் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர், மதுரையில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், தஞ்சை , பாளையங்கோட்டை , பரங்கி பேட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோன்று வெப்பநிலை பதிவாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.