Advertisement

சருமம் பொலிவடைய எளிய அழகுக் குறிப்புகள் உங்களுக்காக

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:22:20 AM

சருமம் பொலிவடைய எளிய அழகுக் குறிப்புகள் உங்களுக்காக

வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால், முகம் பொலிவின்றிக் காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரால் கழுவினால், முகம் சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்குகள், ஸ்க்ரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.

எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்துக் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். ஆனால், முகப்பரு உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது.

facial,yogurt,lemon fruit,cosmetics ,முகப்பொலிவு, தயிர், எலுமிச்சை பழம், அழகுப்பொருட்கள்

பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகோடா போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதோடு சருமத்தின் நிறமும் மாறும்.

எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். அப்படியே வெயிலில் சுற்றினால், சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் லோஷனைத் தடவி செல்லவேண்டும். குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிடவேண்டும்.

தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், ஒரு வாரத்தில் ஒரு நல்ல முகப் பொலிவு கிடைக்கும்.

Tags :
|
|