Advertisement

போட்டோவில் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெற ஒருசில மேக்கப் டிப்ஸ்!

By: Monisha Thu, 02 July 2020 6:00:20 PM

போட்டோவில் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெற ஒருசில மேக்கப் டிப்ஸ்!

போட்டோவில் பளிச்சென்றும் அழகாக தெரிய வேண்டுமா? எப்படி மேக்கப் போடுவது என்று தெரியவில்லையா? இதோ உங்களுக்காக போட்டோவில் அழகாக தெரிய ஒருசில மேக்கப் டிப்ஸ்!

போட்டோவிற்கு போஸ் கொடுக்க மேக்கப் போடும் போது, தவறாமல் சரும நிறத்திற்கு ஏற்றவாறான பிரைமரை தேர்ந்தெடுத்து தடவ வேண்டும். அப்படி சரியான பிரைமரை தேர்ந்தெடுத்து தடவினால், அதற்கு மேல் போடப்படும் மேக்கப்பானது சரியாக இருக்கும்.

ஃபவுண்டேஷன் வாங்கும் முன், அதனை ட்ரையல் செய்து பார்க்க வேண்டும். அப்படி ட்ரையல் பார்க்கும் போது, தவறாமல் செல்பீ எடுத்துப் பாருங்கள். இதன் மூலம் எந்த ஃபவுண்டேஷன் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.

photo,freshness,makeup tips,beauty ,போட்டோ,புத்துணர்ச்சி,மேக்கப்,டிப்ஸ்,அழகு

சன்ஸ்க்ரீனானது போட்டோ எடுக்கும் போது பளிசென்று வெளிக்காட்டும். அதிலும் சன்ஸ்க்ரீன் வாங்கும் போது, டைட்டானியம் டை ஆக்ஸைடு இல்லாததை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

போட்டோ எடுக்கும் போது அழகாக வெளிப்பட வேண்டுமென்று பலர் கண்களுக்கு அதிக மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி கண்களுக்கு மேக்கப் போட்டால், உதடுகளில் போட்டும் லிப்ஸ்டிக்கின் அளவை குறைக்க வேண்டும்.

போட்டோ எடுக்கும் போது கண்களுக்கு அளவாக மேக்கப் போட்டிருந்தால், உதடுகளுக்கு நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, எப்போதுமே உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் நல்ல அழகான தோற்றத்தைக் கொடுக்கும். இன்னும் உதடுகள் நன்கு அழகாக வெளிப்பட வேண்டுமானால், உதடுகளுக்கு மின்னும் லிப் கிளாஸ் போட வேண்டும். இதனால் இளமையான மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெறலாம்.

Tags :
|