Advertisement

காடு போல கருக்கருன்னு முடி வளர 1 கைப்பிடி இந்த இலை இருந்தாலே போதும்

By: vaithegi Tue, 15 Aug 2023 4:45:45 PM

காடு போல கருக்கருன்னு முடி வளர 1 கைப்பிடி இந்த இலை இருந்தாலே போதும்

காலம் எத்தனை நாகரீகமாக மாறினாலும் கூட முடி வளர்த்துக் கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைவதே இல்லை. முடி உதிர்வை தடுக்கவும் முடி நன்றாக வளரவும் கொய்யா இலை பெரியதும் பயன்படுகிறது இந்த தகவல் பலருக்கும் புதிதாக இருக்கலாம். இந்த கொய்யா இலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் இருப்பதுடன், முடி வளர்ச்சியை தடுக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய தன்மையும் உள்ளது.

இந்த பேக்கை தயாரிக்க முதலில் சிறிது கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொய்யா இலைகள் பூச்சி வெட்டு அல்லது வாடி இல்லாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு 10 இலை இருந்தால் கூட போதுமானது. இதை 1 பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்றாக அலசி எடுத்த பிறகு, இந்த இலைகளை மிக்ஸி ஜாரில் சின்ன சின்னதாக கிள்ளி போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த கொய்யா இலையை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி இதன் சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். இச்சாறை தலையில் தேய்க்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் பிசுக்கு அழுக்கு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். ஆகையால் தலைக்கு குளித்த பிறகு இந்த முறையை செய்வது சரியாக இருக்கும். இப்போது எடுத்து வைத்த சாறை ஒரு காட்டன் பஞ்சில் முக்கி எடுத்து உங்கள் முடிகளில் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விடுங்கள். அதன் பிறகு பத்து நிமிடம் உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்த பின் இதை அப்படியே தலையில் விட்டு விடுங்கள்.

leaf,hair ,இலை ,முடி

இதையடுத்து இந்த கொய்யா இலையின் சாறு தலையில் குறைந்தது 1 மணி நேரமாவது தலையில் இருக்க வேண்டும். இது உங்கள் தலையில் இவ்வளவு நேரம் இருப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவே இதை தைரியமாக தலையில் வைத்து இருக்கலாம். அதன் பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றி தலை அலசினாலே போதும். ஏற்கனவே நாம் தலைக்கு குளித்த பிறகு தான் இதை தேய்க்கிறோம். ஆகையால் மறுபடியும் ஷாம்பூ போட வேண்டிய அவசியம் கிடையாது..

மேலும் இது மிக மிக எளிமையான முறையை வாரம் 1 முறை இது போல செய்து வரும் பொழுது அதிகமாக முடி கொட்டுபவர்களுக்கு முடி உதிர்வு நிற்பதுடன் முடி தொடர்ந்து நன்றாக வளர்ந்து வரும். சாதாரணமாக கிடைக்கும் இந்த கொய்யா இலையை பயன்படுத்தி எத்தனை பெரிய பிரச்சனைக்கு நாம் எளிய தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம்

Tags :
|