Advertisement

கண் மை அதிகம் உபயோகிப்பவர்களா? சில ஆலோசனைகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 28 Sept 2023 07:12:40 AM

கண் மை அதிகம் உபயோகிப்பவர்களா? சில ஆலோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய வாட்டர் ப்ரூஃப் கண் மை, மஸ்காரா போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது.
இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவந்து போதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம். பொதுவாக, தினமும் கண்களுக்கு மையிடுபவர்கள் வீட்டிலிருக்கும் நேரம், விடுமுறை நாள்கள் போன்றவற்றின்போது அதைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்தும்.
கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதிக கவனம் தேவை. அது மிகவும் சென்சிட்டிவ் ஏரியா என்பதால், விலை குறைவாக உள்ளது என்பதற்காகத் தரமில்லாத பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
மேலும், ஐ மேக்கப் பொருள்களை வாங்கும்போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றை நிச்சயமாக கவனித்து வாங்க வேண்டும். குறிப்பாக, ஒருவர் பயன்படுத்திய கண்மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

eye,makeup,vision,kajal,ideas ,கண், மேக்கப், பார்வைத்திறன், காஜல், யோசனைகள்

Tags :
|
|
|
|