Advertisement

முகம் பளிச்சிட அதிக செலவேயில்லாத எளிய பேஸ்பேக்

By: Nagaraj Mon, 05 June 2023 7:07:46 PM

முகம் பளிச்சிட அதிக செலவேயில்லாத எளிய பேஸ்பேக்

சென்னை: முகம் பளிச்சிட அதிக செலவேயில்லாத எளிய பேஸ்பேக் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபேஸ் பேக்கை தயாரிக்க: ஒரு ஸ்பூன் அரிசி மாவு, கால் டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் கெட்டி தயிர், கால் ஸ்பூன் காபி பவுடர், இவை அனைத்தையும்ஒன்றாக சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குறைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில் சேர்த்து இருக்கும் அரிசி மாவு உங்கள் முகத்திற்கு நல்ல ஒரு ஸ்க்ரப்பிங்ஏஜென்ட் ஆக இருக்கும். அது மட்டும் இன்றி மஞ்சள் ஸ்கிப்பிங் செய்யும் போது நம்முடைய முக துவாரத்தினுள் சென்று உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள், அழுக்குபோன்றவற்றை வெளியேற்றும்.

simple recipe,blackheads,face,glow,rice flour,coconut oil ,எளிய வழிமுறை, கருந்திட்டுகள், முகம், பளபளப்பு, அரிசி மாவு, தேங்காய் எண்ணெய்

இத்துடன் கலக்கும் எண்ணையானது முகத்திற்குநல்ல ஒரு ஈரப்பதத்தையும் தரும். தயிர்,காபி பவுடர் இவை இரண்டும் முகத்தில் உள்ள அழுக்கை எல்லாம் நீக்கி முகத்தின் நிறத்தை கூட்ட உதவும். இதில்இருக்கும் ரோஸ் வாட்டர்க்கு முகத்தை நல்ல மிருதுவாக்கக் கூடிய தன்மை உண்டு.

இவை எல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு குழைத்த பிறகு, உங்கள் முகத்தை சுத்தம் செய்த பின் இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி செய்து 30 நிமிடம்அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை வட்டமாக தேய்த்து அதாவது கீழிருந்து மேலாக சுழற்றி ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு முகத்தை நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள்.

இதை இரவில் படுக்கும் முன்பு செய்த பிறகு முகம் அலம்பிய பிறகு உறங்கிவிடுங்கள். மறுநாள் காலையில் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் உள்ள கருந்திட்டுகள், வெயிலினால் ஏற்பட்ட கருமை நிறம் போன்றவை எல்லாம் மறைந்து உங்கள் முகம் நல்ல பொலிவாக மாறி இருக்கும். இதை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய முகம் பளபளப்படையும்.

Tags :
|
|